Sunday, May 8, 2011

செதலபதி அருள்மிகு முக்தீஸ்வரர்

மனிதன் தன் வாழ்நாட்களில் தன் வாழ்வை சிறப்பாக ஆக்கிக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்கிறான். இம்முயற்சிகளில் சுயமாய் வென்றவர்களும், மற்றவர்களின் உழைப்பைத் திருடி வென்றவர்களும் உண்டு. தவறு என்கிறபோது அது பாவம் என்றாகிறது. அதே வேளையில், இன்னும் ஒரு பாவமும் இருக்கிறது. என்ன அது?

ஒரு ஆண்மகன் தன் தாய், தகப்பன் மரணமடைந்த பிறகு, பின் வரும் நாட்களில் அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் (ஆடி, தை அமாவாசை) இறந்த தாய், தகப்பனை நினைத்து, தர்ப்பணம் செய்யவேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது. அவ்வாறு, செய்ய மறந்தாலும் அது பெரும் பாவம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவ்வாறு பல வருடங்கள் செய்யவில்லை அல்லது எனக்கு தெரியவில்லை, அதனால் செய்யவில்லை என்றாலும், பாவம் தான். ஆனாலும், இப்பாவத்தைப் போக்கிக் கொள்ள வழி இருக்கிறது. 

வசதியுள்ளவர்கள் காசிக்கோ, இராமேஸ்வரத்துக்கோ சென்று வருவார்கள். ஆனால், மிடில் கிளாஸ் மக்களுக்கு இறைவன் இன்னும் ஒரு இடத்தில் எழுந்தருளியிருக்கிறான். அவ்விடம் தான், செதலபதி என்னும் திருத்திலதைப்பதி. 

இத்திருத்தல இறைவன், அருள்மிகு மதிமுக்தீஸ்வரர். இறைவி, அருள்மிகு பொற்கொடி நாயகி. இத்தலம், மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் எனும் ஊரில் இருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது. 

மேலும் தகவல்களுக்கு, கிளிக் செய்யுங்கள்!


தொடர்புக்கு:
9786402661